[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு

compensation-for-natural-disaster-victims-in-the-car-motorcycles

புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முறையான காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீடு பெற்று கொள்ளலாம் என வாகன காப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட வாகனத்தின் காப்பீடு ஆவணத்துடன் காப்பீடு அலுவலகத்திற்கு போன் செய்து பதிவு செய்தால் வீட்டிற்கே அலுவலர்கள் வந்து விடுவார்கள் என்கின்றன காப்பீடு நிறுவனங்கள். இந்நிலையில் காப்பீட்டு ஆவணங்கள் எதுவுமே இல்லாவிட்டால் வாகன எண்ணை மட்டும் வைத்து காப்பீடு பெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வாகனம் பதிவு செய்யப்பட்ட 15 வருடங்களுக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே காப்பீடு பெற முடியும் என்ற தகவலையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருசக்கர வாகனத்தை பொருத்தவரை உரிய ஆவணம் இருந்தால் பிளாஸ்டிக் பாகங்களுக்கு 50 சதவீதம் வரை காப்பீடும் இரும்பு பாகங்களுக்கு 65 சதவீதம் வரை காப்பீடும் பெறலாம் எனக் கூறப்படுகிறது நான்கு சக்கர வாகனங்களை பொருத்தவரை எந்தெந்த பாகங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close