[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

கிரண் ரிஜிஜூ மீதான ஊழல் புகார் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

parliament-adjourned-after-opposition-uproar-over-kiren-rijiju-demonetisation

மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மீதான ஊழல் புகார் விவகாரத்தால் ஏற்பட்ட அமளியில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாயும் பிச்சோம் மற்றும் டெங்கா ஆற்றின் நீரை மையமாக வைத்து கடந்த 2005-ம் ஆண்டு காமெங் புனல் மின்சார நிலையம் திறக்கப்பட்டது. இந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியில் 450 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த ஊழலில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் அவரது உறவினர் கோபோய் ரிஜிஜு ஆகியோருக்கு தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.

மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், கிரண் ரிஜிஜூ விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்தும் அவர்கள் குரல் எழுப்பினர். இந்தத் தொடர் அமளியால் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

இதே போல் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்ட உறுப்பினர்கள் கிரண் ரிஜிஜூ பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். இதை எதிர்த்து பாஜகவினர் கோஷமிட்டனர். இந்த அமளியால் அவை இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடிய போதும் அமளி நீடித்தது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close