மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக, குற்றப்பிரிவு போலீசார், தானே நகரில் மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
செல்லாத நோட்டுகளை, 20 சதவிகித கமிஷன் அடிப்படையில் மாற்றிய போது போலீசாரிடம் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக மூன்று பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம், நவிமும்பையில் 24 லட்சம் ரூபாயும், உல்ஹசன்நகரில் 10 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
இரட்டை இலக்கமா..? இரட்டை இலையா..? குழப்பத்தில் தேமுதிக...!
தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இன்று உலக தாய்மொழி தினம் ! இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன ?
"தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும்" தஷ்வந்தின் தந்தை
200 அடி குழிக்குள் விழுந்த 6 வயது குழந்தை: மீட்பு பணி தீவிரம்