[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பத்திரிகையாளர் மன்றத்திற்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

maoists-has-written-letter-to-journalist-foundation

கேரள மாநிலத்தில், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மாவோயிஸ்டுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்திற்கு நேற்று மாவோயிஸ்டுகள் அமைப்பு சார்பாக கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வசதி படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு புதிய பணத்தாள்களை அறிமுகபடுத்தியுள்ளது. மக்கள் கையில் இருந்த 80 சதவிகிதம் பணத்தை வங்கிகள் எடுத்துக்கொண்டு, அதனை அந்நிய நாட்டு முதலீட்டார்களுக்கு பயன்படுத்திட வழங்குவதற்கான திட்டம் தான் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 500, 1000 ரூபாய் பணதாள்கள் ரத்து செய்யபடுவது குறித்து பாரதிய ஜனதா கட்சி தனது கட்சிகாரர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டது. அதன் மூலம் அவர்கள் தங்களது பணத்தை முன்கூட்டியே மாற்றிகொண்டுள்ளனர். வசதி படைத்தவர்களின் கடன் தள்ளுபடி, அவர்களுக்கான வரியினங்கள் குறைப்பு உள்ளிட்ட திட்டங்களால் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் வியாபாரிகளை நசுக்கி, அந்நியநாட்டு முதலாளிகளுக்கு அணைத்து பணபரிவர்த்தனைகளும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு புதிய பணபரிவர்த்தனை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நம் நாட்டில் 60 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் உள்ள நிலையில் அவர்களால் எப்படி மின்னணு பணபரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதுபோன்ற மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டுமென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தின் கீழ் பகுதியில் சிபிஐ மாவோயிஸ்டு, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கமிட்டி தலைவர் ஜோகி என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்த சில தினங்களாக கேரளாவில் மாவோயிஸ்டுகள் ஆளும் கேரளா அரசு, காவல்துறையினருக்கு எதிராக இதுபோன்ற நோட்டீஸ்களை ஒட்டி வருவது கேரளா அரசிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரளா, நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் நடத்திய கூட்டம் குறித்த வீடியோவில் கேரளாவில் மாவோயிஸ்டு தளத்தை அமைக்க மாவோயிஸ்டுகள் உறுதி ஏற்றுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் ஆயுதம் ஏந்தி பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த வீடியோவில் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். மாவோயிஸ்டுகள் இரண்டு வனத்துறை ஊழியர்களை கடத்த திட்டமிட்டு இருந்ததாக உளவுத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் அமைப்பில் புதிதாக உறுப்பினர்கள் சேர்ந்து வருவதும் அந்த வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close