[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்துக்கு உதவிகள் செய்யப்படும்: ஆந்திர முதலமைச்சர்

andhra-government-ready-to-help-tamilnadu

வர்தா புயலால் அதிக சேதத்தை சந்தித்துள்ள தமிழகத்துக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு தெரிவி‌த்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று கோரத் தாண்டவம் ஆடிய வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு 1000 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் வர்தா புயலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஆந்திரா உதவ முன்வந்துள்ளது. வர்தா புயலால் தமிழகம் சந்தித்துள்ள சேதங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனவும், அதன் அடிப்படையில் ஆலோசித்து உதவிகள் செய்யப்படும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close