[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பு

railways-plans-to-train-tickets-will-be-rises

ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 20 ஆ‌யிரம் ‌கோடி ரூபாய் மதிப்பில் நிதித் தொகுப்பை உருவாக்க அத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தொகையில் 25 சதவிகிதத்தை மட்டுமே தர மத்திய நிதியமைச்சகம் இணங்கியுள்ளதாக தெரிகிறது. எனவே மீதமுள்ள நிதியை பயணிகள் கட்டணம் மூலம் திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பு கட்டணங்‌கள் ஏற்கனவே அதிகளவில் உள்ளதால் அதில் சிறிய உயர்வு மட்டுமே செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயம் 2-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி ஆகிய பிரிவுகளில் கணிசமான க‌ட்டண உய‌ர்வை அறிவிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் ரயில்வே பாதுகாப்பு அம்சங்களை‌ வலுப்படுத்தும் வகையில்‌ உருவாக்கப்பட உள்ள நிதித் தொகுப்பில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close