[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அதிதீவிர புயலாக மாறிய‌ 'வர்தா'.. நாளை மாலை கரையை கடக்கிறது

cyclone-vardha-alert

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயல் சென்னை - ஓங்கோல்‌ இடையே நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ள வர்தா புயல், நெல்லூரில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல் படிப்படியாக ‌‌வ‌லுவி‌ழந்து, சென்னை-ஆந்திர மாநிலம் ஓங்கோல் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

‌அப்போது ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம், ஆந்திராவை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close