[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

டெல்லியில் சட்ட நிறுவனத்தில் இருந்து ரூ.10 கோடி பறிமுதல்

10cr-amount-seized-in-delhi

டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து, 2.5 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் உள்பட 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள தனியார் சட்ட நிறுவனத்தில் குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த திட்டமிட்டனர். ஆனால் சோதனைக்கு சென்ற போது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால், நிறுவனத்துக்கு காவலில் இருந்தவர் உதவியுடன் அலுவலகத்தை திறந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பெட்டிகளிலும், பீரோக்களிலும் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட பணத்தில் சுமார் 2.5 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் டான்டனை தேடி வருவதாகவும் இந்நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோத‌னை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close