[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

fog-shrouds-in-north-state

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே குளிர்காற்றுடன் பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இன்று தலைநகர் டெல்லி பனி போர்வையால் போர்த்தப்பட்டது போல காட்சி அளிக்கிறது. பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலையிலும் வட முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கி வருகின்றனர். ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை இன்று 101 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 11 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 18 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும்பாலானோர் ரயில் நிலையத்திலேயே தங்கியுள்ளனர். இதேபோலவிமான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியை போலவே உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் மக்கள் தங்களை வெப்பப்படுத்திக் கொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் கடும் குளிர் காற்று காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close