[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

நள்ளிரவு முதல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது

old-500-notes-not-accepted-in-railway-station-and-bus-from-midnight

ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவுக்கு பின் ஏற்கப்படாது.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு அறிவித்தார். இதனைத் தொடாந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

இதனிடையே பொதுமக்களுக்கு வசதியாக, பேருந்து, மற்றும் ரயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாளை முதல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் கொடுத்தால் அது ஏற்கப்படாது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close