[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை

national-anthem-in-kerela-flim-festival

கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா வரும் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள பல்வேறு நாட்டினரும் வருகை தர உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின் படி விழாவில் திரையிடப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் தொடக்கத்தின் போதும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு முறை தேசிய கீதம் இசைக்கப்படும் போதும் எழுந்து நிற்க சிரமமாக இருக்கும் என்று கேரளாவிலுள்ள கொடுங்கனூர் திரைப்பட சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய கீதம் ஒவ்வொரு திரைப்படம் தொடங்கும் போது கட்டாயமாக இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதே சமயம் தேசிய கீதம் இசைக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் மட்டும் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று விலக்கு அளித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close