[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

முறையான கணக்கில்லாமல் ரூ.100 கோடி டெபாசிட்

high-amount-seized-in-axis-bank

டெல்லியில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் முறையான கணக்கு இல்லாமல் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையில் ஆக்ஸிஸ் வங்கியில் 44 வங்கிக் கணக்குகளில் நவம்பர் 8 முதல் சுமார் 100 கோடி ருபாய் அளவுக்கு முறையாக கணக்கு இல்லாத பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் போலியான 15 வங்கிக் கணக்குகளில் சுமார் 70 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் சோதனையில் ஆக்சிஸ் வங்கியின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 450 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கடந்த மாதம் ஆக்ஸிஸ் வங்கியின் காஷ்மீர் கேட் கிளையில் நடத்தப்பட்ட சோதனையில் 3.5 கோடி ரூபாய் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close