[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

மார்ச் மாதத்தில் புனித அந்தோணியார் தேவாலய திறப்பு விழா...!

the-opening-ceremony-of-the-st-antony-church

கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆலயத் திறப்பு விழா வரும் மார்ச் மாதம் தான் நடைபெற உள்ளது என நெடுந்தீவு பங்குத்தந்தை புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, 7- ஆம் தேதி கச்சத்தீவில் நடைபெறவிருந்த புனித அந்தோணியார் தேவாலய புதிய கட்டட திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாய் கட்டப்பட்டுள்ள ஆலயத்தை கடற்படை அதிகாரிகள் மறை மாவட்டத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வுதான் தற்போது நடைபெற உள்ளதாக கூறியுள்ள அவர், வரும் 2017- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் அதிகாரபூர்வமாக இருநாட்டு பக்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்களால் ஆலய திறப்புவிழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆலயம் திறப்பு விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் பழைய ஆலயத்திற்கு 10 அடி தூரத்தில், 2 ஆயிரத்து 600 சதுர அடி நீளமுடைய புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ள நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன், கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயம் பழமை மாறாமல் அப்படியே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close