[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

நாடாளுமன்றத்தில் தர்ணா செய்வதற்காக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: பிரணாப் முகர்ஜி

mps-people-do-not-choose-to-sit-in-parliament-president-pranab-mukherjee

நாடாளுமன்ற நடவடிக்கை‌கள் பாதிக்கப்படுவதை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்க முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்‌.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்குத்தான் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் எனவும் தர்ணாவில் ஈடுபடுவதற்காக அல்ல எனவும் கூறினார். ஆனால் அவையை முடக்குவதே வாடிக்கையாகி விட்டது என்று கூறிய அவர், நாடளுமன்ற சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதாகவும் அது ஏற்க முடியாதது எனவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே, இரண்டு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகின்றன. உறுப்பினர்களின் தொடர் அமளியால் இதுவரை 14 நாட்கள் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் செயல்படவில்லை. ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் அவையில் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த முன்வரவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. இன்றும் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close