[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை

no-churidar-at-padmanabhaswamy-temple-hc

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்கள் சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து செல்லத் தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோயிலில் கடைபிடிக்கவேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் தொடர்பாக தலைமை குருக்களின் முடிவே இறுதியானது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில், பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த நடைமுறைக்கு மாறாக பெண்கள் சுடிதார் அணிந்து வரலாம் என்று கோயிலின் செயல் அலுவலர் கே.என்.சதீஸ் என்று கடந்த நவம்பர் 29ல் அறிவித்தார். கோயில் தலைவர் கே.ஹரிபால் எதிர்ப்பையும் மீறி சதீஸ் இந்த நடைமுறையை அமல்படுத்தினார். இந்த முடிவுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கோயில் அலுவலரான சதீஸுக்கு மரபுகளை மாற்றி உத்தரவிடும் எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close