[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

நக்ரோட்டா தாக்குதல்..என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

nia-to-take-up-investigation-into-the-terrorist-attack-on-the-army-camp-in-nagrota

நக்ரோட்டா ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலானாய்வு அமைப்பு விசாரிக்க உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் கடந்த நவம்பர் 29-ல் புகுந்த காவலர் சீருடையில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் 2 பேர் உள்பட ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். ராணுவத்தின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து ராணுவம் விசாரித்து வந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்ரோட்டா காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நக்ரோட்டா தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, டெல்லியில் உள்ள தேசிய புலானாய்வு அமைப்பின் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்ரோட்டா ராணுவ முகாமுக்குச் சென்றும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரனை நடத்த உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close