[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

சோ ராமசாமி மறைவிற்கு மாநிலங்களவையில் இரங்கல்

mourning-in-rajya-sabha-for-cho-ramaswamy-death

நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ, மறைவிற்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகருமான சோ ராமசாமி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடிய போது, அவையின் முன்னாள் உறுப்பினரான சோ ராமசாமியின் மறைவிற்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று சோ-வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேசிய அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி, மிகச் சிறந்த பத்திரிகையாளரை, பன்முகம் கொண்டவரை நாடு இழந்துவிட்டதாக புகழாரம் சூட்டினார்.

1999-ம் ஆண்டு முதல் 2005 வரை மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக சோ ராமசாமி பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close