[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிற மாநில முதல்வர்கள் வாழ்த்து

jayalalithaa-get-well-greeting-to-the-other-state-cm

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற லட்சோபலட்சம் அதிமுக தொண்டர்களின் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் குணம் பெற தானும் மகாராஷ்டிர மக்களும் இறைவனிடம் பிரார்த்திப்பதாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னவிஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்ற தகவலை கேட்டு வருத்தம் அடைந்ததாகவும் அவர் குணமடைய வாழ்த்துவதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் தமிழக முதல்வர் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close