[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று திரும்புவார்:கிரண் பேடி

kiren-bedi-statement-about-jayalalitha

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று திரும்புவார் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் சிகிச்சை அளித்து வந்தனர்.முதல்வரின் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.தற்போது அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து புதுச்சேரியில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.முதல்வர் மீது மதிப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.சில விஷயங்கள் இறைவன் கையில் மட்டும் தான் உள்ளது.மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close