[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

வட மாநிலங்களில் நீடிக்கும் பனிப்பொழிவு.. பரிதவிக்கும் மக்கள்

fog-hits-in-delhi

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து 5-வது நாளாக கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் சில தினங்களாக அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. சாலைகளில் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால் போதிய அளவில் வெளிச்சம் இல்லை. இதனால் சாலைகளின் எதிரில் வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து 5-ஆவது நாளாக அதிகமான பனிப்பொழிவு காணப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவால் 11 ரயில்கள் மற்றும் ஒரு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 54 ரயில்களும் 9 விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இதனால் ரயில் பயணிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். சாலையோரங்களில் வசிப்பவர்கள் நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுளளள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close