[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

பிராந்திய அமைதி குறித்த 2 நாள் மாநாடு பஞ்சாப்பில் இன்று தொடக்கம்

amritsar-set-to-host-heart-of-asia-meet

பிராந்திய அமைதி தொடர்பான இரண்டு நாள் மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று தொடங்குகிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று பயங்கரவாதிகளால் ஆசிய பிராந்தியம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் சார்பாக, வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். உரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதன்முறை ஆகும். இன்றைய கூட்டத்தில் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான குழு பங்கேற்கிறது.

நாளை மாநாட்டின் முக்கிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபரும் உரையாற்ற உள்ளனர். இதனிடையே மாநாட்டையொட்டி பஞ்சாபில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close