[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

செல்லா நோட்டு அறிவிப்பை விமர்சிப்பவர்கள் 50 நாட்கள் பொறுத்திருங்கள்... ராஜ்நாத் சிங் கோரிக்கை

rajnath-singh-statement-about-currency-note-ban

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கடந்த மாதம் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,பணம் எடுப்பதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசலில் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் மக்கள் அரசை ஆதரிப்பதாக கூறினார்.

மக்கள் நாட்டு நலனுக்காக தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஆனால், ஒரு சில எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சிப்பதாக கூறிய அவர், நாட்டில் புரையோடிப் போன ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லையா எனக் கேள்வி எழுப்பினார். பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close