[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பெட்ரோல் பங்க்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்.. !

old-currency-notes-will-not-be-accepted-in-tollgates-petrol-bunks-from-tomorrow

பெட்ரோல் பங்க்குகளில், சுங்கச்சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த இன்றே கடைசி நாள் ஆகும்.

பண மதிப்பு நீக்க நட‌வடிக்கையை அறிவித்த மத்திய அரசு, டிசம்பர் 15-ஆம் தேதி வரை குறிப்பிட்ட‌ சில இடங்களில் மட்டும் பழைய ‌500 ரூபாய் நோட்டு‌ளை பயன்படுத்த அனுமதித்திருந்தது.

இந்நிலையில், பெட்ரோல் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மூலம் ‌கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அதற்கான விதிகளில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‌டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் நிலையங்கள், சுங்கச் சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படு‌த்த முடியும் என்ற அறிவிப்பை ரத்து செய்து, இன்று வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகளை இந்த இடங்களில் பயன்படுத்த முடியும் என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ‌பழைய 500 ரூபாய் மூலம் விமான டிக்கெட்டுகளை வாங்கவும் இன்றே கடைசி நாள்.

ஆனால், ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தபடி, டிசம்பர் 15-ஆம் தேதி வரை கூட்டுறவு அங்காடிகளில் பொருட்களை வாங்குவதற்கு, மத்திய மாநில அரசு கல்லூரிகளில் கட்டணம் கட்டுவதற்கு, செல்போன் ரீசார்ஜ் ஆகியவற்றிற்கு பழைய 500 ரூ‌பாயை பயன்படுத்தலாம் என்ற விதிமுறையில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ரயில் பயணச்சீட்டு, பொது போக்குவரத்துத்துறை, பால் அங்காடிகள், மின்சார-குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close