[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

நாடு முழுவதும் 90 சதவீத ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.. தயாரிப்பு நிறுவனம்

1-80-lakh-atms-recalibrated-to-dispense-new-notes-says-atm-manufacturer-ncr-corporation

நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு 90 சதவீத ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டு விட்டதாக ஏடிஎம் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான என்சிஆர் தெரிவித்துள்ளது.

பணம் மதிப்பிழப்பு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் 90 சதவீத இயந்திரங்களை புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு நவம்பர் 30ம் தேதிக்குள் மறுசீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 1.8 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஏடிஎம் இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்சிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவுக்கு தினசரி குறைந்தது 12,000 ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஏடிஎம் இயந்திரங்கள் அடுத்த 10 நாட்களுக்குள் மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close