[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

விக்ஸ் ஆக்‌ஷன் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

vicks-action-500-corex-as-delhi-court-cancels-ban

எஃப்டிசி எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட கலவையில் தயாரிக்கப்படும் 344 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

எஃப்டிசி முறையில் தயாரிக்கப்படும் விக்ஸ் ஆக்‌ஷன், டி கோல்டு உள்ளிட்ட 344 பொது மருந்துகளை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தடை செய்தது. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த மருந்துகளை தயாரிக்கவும், விற்கவும் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஃபைசர், க்ளென்மார்க், ப்ராக்டர் அண்ட் கேம்பிள், சிப்லா ஆகிய முன்னணி மருந்து நிறுவனங்கள் சார்பில் 454 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு மார்ச் 14ம் தேதி இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து நடந்த விசாரணையின்போது, இந்த 344 மருந்துகளுக்கு மாற்றாக பாதுகாப்பான மரு‌ந்துகள் கிடை‌ப்பதாகவும், பொதுமக்களின் நலம் கருதியே தடை விதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நம்நாட்டில் ‌40 ஆயிரம் எஃப்டிசி (FDC) மருந்துகள் பொது மருந்துகளா‌க விற்கப்படுவதால், அனைத்தையும் கண்காணித்து முறைப்படுத்த சாத்தியமில்லை என்பதால்,‌ ஆ‌பத்தானவை என நிபுணர் குழு‌ பரிந்துரைத்த‌ ‌34‌4 மருந்துகளுக்கும் தடை விதி‌க்கப்ப‌ட்டதாக மத்திய அரசு கூறியது. அரசின் இந்த முடிவை ஆதரிப்பதாக இந்திய மருத்துவ சங்கமும் தெரிவித்தது.

ஆய்வக சோதனைகள் மற்றும் புள்ளிவிவரங்களை கவனத்தில் கொள்ளாமல், ‌சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காமலும் திடீரென தடை ‌விதிக்கப்பட்டதை ஏற்க இயலாது என்று மருந்து ‌நிறுவனங்கள் ‌வாதிட்டன. இருத‌ரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ராஜிவ் சகாய் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close