[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்பு

petrol-bunk-will-accept-old-500-currency-until-tomorrow

பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே (டிச. 2) பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.

இதனையடுத்து புதிய நோட்டுகள் கிடைக்காத மக்கள் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமலும் அவதிப்பட்டனர். எனவே பழைய 500 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்குகளில் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி நாளை வரை மட்டுமே விமான டிக்கெட்டுகளையும் பெற முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close