[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது?

old-currency-rework-for-plywood

பழைய ரூபாய் நோட்டுக்களை கூழாக்கி, பிளைவுட் செய்ய பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

நவம்பர் 8ம் தேதி ரூ.500, 1,000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை கூழாக்கி, பிளைவுட் செய்ய பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த பழைய நோட்டுக்களை கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட் நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 140 டன்னுக்கும் அதிகமான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டன் ஒன்றிற்கு 250 ரூபாய் தொகையை இந்நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு விலையாக தருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close