[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

sc-orders-national-anthem-should-be-played-in-all-cinema-halls-across-the-country-before-movie-start

நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இழிவுபடுத்தப்படுவதாக, போபாலை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஷ்யாம் நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதத்தை கண்டிப்பாக இசைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடி திரையிடப்பட வேண்டும் எனவும்
அப்போது, திரையரங்கில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அனைத்து திரையரங்குகளிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வணிக ரீதியான பலன்களை பெறும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை இசைக்க கூடாது என்றும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரும்பத்தகாத பொருட்களில் தேசிய கீதத்தை அச்சடிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்பது கூட தற்போதுள்ள மக்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ள நீதிபதிகள், மக்களுக்கு அது கட்டாயமாக கற்றுத்தரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்ற மத்திய அரசு இது தொடர்பான அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close