[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

மக்களவைக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி..எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி

parliament-adjourned-until-12-00-pm

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே ரூபாய் நோட்டு திரும்பப்பெறப்பட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அவையை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடிய போது, இடைத்தேர்தலில் பெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இதுநாள் வரை வலியுறுத்தி வந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பங்கேற்றிருந்தார். அப்போது, ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடிய போதும், எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 12.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 12.45 மணிக்கு அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல, மாநிலங்களவையிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவரின் இருக்கை அருகே எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் அவை தொடர்ந்து செயல்பட முடியாமல் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகள் அமளியை கைவிடவில்லை. இதனைத்தொடர்ந்து மாநிலங்களைவ 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close