[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு புது கட்டுப்பாடு... மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க அனுமதி

rs-10-000-withdrawal-allowed-from-jan-dhan-account-in-a-month

பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், அதிலிருந்து பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றி வருகின்றனர். மேலும் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், அதிலிருந்து மாதத்திற்கு ரூபாய் 10,000 மட்டுமே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால், வங்கி மேலாளரின் அனுமதி பெற வேண்டும். மேலும் KYC விவரங்களை தராதவர்கள் மாதம் 5,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜன் தன் கணக்கு மூலம் பணக்காரர்களின் கறுப்புப் பணம் ஏழைகள் மூலம் வெள்ளையாக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close