[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

'டைம்' பிரபலமாக தேர்வாக மோடிக்கு வாய்ப்பு

time-popular-choice-the-chance-to-modi

டைம் பத்திரிகையின் இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட மனிதராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த டைம் பத்திரிகை, ஆண்டுதோறும் உலக அளவில் ஒரு பிரபலத்தை தேர்வு செய்து டிசம்பர் மாத இதழில் அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டின் சர்வதேச பிரபலத்தை தேர்வு செய்வதற்கான இணைய தள வாக்கெடுப்பு நடந்து வருகிறது. அதில் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், தற்போதைய அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார். ‌

மோடிக்கு 21 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஒபாமா 7 சதவிகிதமும், ட்ரம்ப் 6 சதவிகிதமும் பெற்றுள்ள நிலையில், வாக்குகளை பதிவு செய்ய டிசம்பர் நான்காம் தேதி வரை அவகாசம் உள்ளது. இப்போது மோடிக்கு கிடைத்துள்ள வாக்குகள் சராசரி நீடித்தால், இந்த ஆண்டின் பிரபலமாக டைம் பத்திரிகையில் அவர் தேர்வாக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டின் டைம் பிரபலமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தேர்வாகியிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close