[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

சட்டப்பேரவைக்குள் அரைக்கால் சட்டையுடன் நுழைய முயன்ற எம்எல்ஏவால் பரபரப்பு..!

attired-in-shorts-and-vest-bihar-bjp-mla-denied-entry-in-assembly

பீகார் சட்டப்பேரவைக்கு பனியன் மற்றும் அரைக்கால் சட்டையுடன் வந்த பாஜக எம்எல்ஏ-விற்கு பேரவைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

பீகார் மாநிலம் பேட்டியா என்ற இடத்திலிருந்து மனுவாப்புல் வரை 44 கிமீ சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதனை கண்டித்து சட்டப்பேரவைக்கு பனியன் மற்றும் அரைக்கால் சட்டையுடன் பாஜக எம்எல்ஏ வினய் பிகாரி நேற்று வந்துள்ளார். ஆனால், பேரவைக்குள் நுழைய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் வரை பேரவைக்கு அரைக்கால் சட்டை ,பனியனுடன் தான் வருவேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close