[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ரொக்கமாக பணம் வாங்குவதை தவிருங்கள்.. கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

hrd-ministry-encouraging-edu-institutions-to-go-for-cashless

கல்வி நிறுவனங்கள் ரொக்கமாக பணம் வாங்குவதைத் தவிர்க்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவரையும் மின்னணு முறை பணப் பரிவர்த்தனைக்கு மாறுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இளைஞர்கள், மின்னணு பணப்பரிமாற்றம் குறித்து தெரியாதவர்களிடவம் அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து சொல்லித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கல்வி நிறுவனங்கள் ரொக்கமாக பணம் வாங்குவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நேற்று அத்துறை சார்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு, அல்லது இன்டர்நெட் மூலமாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மக்களுக்கு அவை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close