[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்கட்சிகள்

both-houses-adjourned-for-the-day-amid-uproar-over-demonetisation

எதிர்கட்சிகளின்‌ அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவை கூடியதும், மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரூபாய் நோட்டு விவகாரத்தை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு எதிராக ஆளும் கட்சி தரப்பில் இருந்தும் பலர் எழுந்து பேசியதால், கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து, எதிர்க் கட்சி எம்.பி.க்கள் அவைத் தலைவரின் இருக்கை அருகே சூழ்ந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல மக்களவையில் ரூபாய் நோட்டு விவகாரத்தை முன் வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் அவைக்கு வந்து விளக்கினால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூனா கார்கே கூறினார். இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசின் நேர்மையை சந்தேகப்பட வேண்டாம் என்றும், விவாதத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்பார் எனவும் கூறினார். தொடர்ந்து அமளி நீடித்ததால் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close