[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ரூபாய் நோட்டு விவகாரம்... மன்மோகன் சிங் பேச்சுக்கு பியூஷ் கோயல் பதில்

indian-rupee-ban-piyush-goyal-answered-manmohan-singh

ரூபாய் நோட்டு விவகாரத்தில் திட்டமிட்ட திருட்டு நடந்திருப்பதாகக் கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவி‌த்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் இந்த பண ஒழிப்பு என்பது அதிகாரப்பூர்வமான கொள்ளை, சட்டரீதியான சூறையாடல் என தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை கையாண்ட விதம் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. இது திட்டமிடப்பட்ட மோசடியாகவும், கறுப்புப் பணத்தை சட்டரீதியாக்குவதற்கும் உதவியிருக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தில் எதிர்கால விளைவுகள் என்ற தலைப்பில் புனேவில் நடந்த கருத்தரங்கில் பியூஷ் கோயல் பேசுகையில், 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாகவும், ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் கோயல் குறிப்பிட்டார். ஆனால், இரண்டரை ஆண்டுகால பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் ஊழல் புகார் ஏதுமில்லை என்ற பியூஷ் கோயல், அரசு மீது குறைகூற ஏதுமில்லாததால், ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்னாள் பி‌ரதமர் மன்மோகன் சிங் திருட்டு என விமர்சித்திருப்பதாகவும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close