[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் உ.பி-யில் கைது

one-person-arrested-rajnath-singh-seeks-report-directs-tightening-of-security

பஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பர்மீந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாட்டியாலாவை அடுத்த நபா பகுதியில் உள்ள சிறைக்கு காவலர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய 10 பேர், சிறையிலிருந்து காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மீந்தர் மிண்டு உள்ளிட்ட 6 பேரை தப்புவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இந்தநிலையில், பஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை உத்தரப்பிரதேச மாநிலம் ஷம்லியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பர்மீந்தரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close