[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

சிறையில் இருந்து தப்பியவர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு.. பஞ்சாப் அறிவிப்பு

punjab-govt-announces-rs-25-lakh-reward-to-any-person-providing-info-leading-to-arrest-of-escaped-pr

நாபா சிறையில் இருந்து தப்பியவர்களை பிடித்துக் கொடுத்தால், 25 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் சிறையில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தப்பிச்சென்ற நிலையில் அம்மாநில சிறைத் துறை இயக்குநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளரும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். சிறையில் நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தெரிவித்தார். மேலும், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுற்கு இச்சம்பவமே சிறந்த உதாரணம் என முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close