[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம்?

salary-pay-in-cash-at-puducherry

புதுச்சேரியில் அரசு ஊழியர்களின் நவம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வைஷாலி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்து மக்களை அலைக்கழிப்பதாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்து, வருகின்ற 28-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வட்டார காங்கிரஸ் சார்பாக மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு ஆழ்த்த இரங்கலை தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை இம்மாதம் வங்கிகளில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நாளை வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close