[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

குழந்தைகள் காப்பகத்தில் நிகழ்ந்த அவலம்.... இது தான் டே கேர்ரா...?

mumbai-daycare-staffer-arrested-for-beating-10-month-old-baby

நவி மும்பை கார்கர் பகுதியில் இயங்கி வரும் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணிபுரியும் ஊழியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை, வேலை என்று சொல்லிக்கொண்டு, தங்கள் குழந்தைகளை காப்பகத்தில் விடும் தாய்மார்களுக்கு அங்கு குழந்தைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை. நவி மும்பை, கார்கர் பகுதியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் பணிக்கு செல்லும்போது கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் பராமரிக்க கொடுக்கப்பட்ட 10 மாத பெண் குழந்தை ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. ‘டே கேர்’ காப்பகத்தில் பணிபுரிந்து வந்த அஃப்சானா சாயிக் என்பவர் இரக்கமின்றி 10 மாத குழந்தையை அடித்து, உதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ருசிதா சின்ஹா என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று தனது 10 மாத குழந்தை பூர்வா-வை டே கேர் காப்பகத்தில் கொடுத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலையை முடித்து விட்டு தனது குழந்தையை பெற்று கொள்ள வந்தபோது, குழந்தையின் கண்ணை சுற்றி காயமாக இருந்தது தெரியவந்துள்ளது. அதற்கு குழந்தை தானாக விழுந்ததால் அடிபட்டது என காப்பக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன் பின் வீட்டுக்கு சென்று குழந்தையை கவனித்த ருசிதா, குழந்தைக்கு பல இடங்களில் அடிபட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் குழந்தையை யாரோ தாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, காப்பகத்தில் தனது 10 மாத குழந்தை அடித்து உதைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல் நிலையத்தில் ருசிதா புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, நாங்கள் குழந்தையை எதுவும் செய்யவில்லை என காப்பக குழந்தை பராமரிப்பாளர் அஃப்சானா சாயிக் தெரிவித்தார். காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 6 சிசிடிவி கேமரா வீடியோக்களை சோதனை செய்த போது, குழந்தையை ஊழியர் கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அஃப்சானா சாயிக் மற்றும் குழந்தை காப்பக உரிமையாளர் பிரியங்கா நிகம் (34) ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close