[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

மின்னணு முறை பணப்பரிமாற்றங்களுக்கு மாறுங்கள்.. பிரதமர் வேண்டுகோள்

modi-asks-people-to-change-for-electronic-payments

கறுப்பு பணம் மீண்டும் உருவாவதை தடுக்க மக்கள் மின்னணு முறை பணப்பரிமாற்றங்களுக்கு மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் நாடெங்கும் வர வேண்டுமெனில் அதற்கு கறுப்புப் பணம் முதலில் ஒழிய வேண்டும் என குறிப்பிட்டார். புற்றுநோய் போல நாட்டின் பொருளாதாரத்தை அரித்துக் கொண்டிருக்கும் கறுப்புப் பணம் ஒழிய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைக்கு ஏழை எளிய மக்களும் வரவேற்பு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கறுப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்கவே உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், அரசின் செயலால் மக்கள் பல சிரமங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

கறுப்பு பணம் மீண்டும் நாட்டில் உருவாவதை தடுக்க மின்னணு முறை பணப்பரிமாற்றங்களுக்கு மாற வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, மின்னணு முறை பணப்பரிவர்த்தனை குறித்து தெரிந்தவர்கள் அதைப்பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சிந்து நதியில் இந்தியாவுக்குள்ள உரிமைகளை ஒருபோதும், விட்டுக் கொடுக்க மாட்டோம் என குறிப்பிட்ட பிரதமர், விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close