[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சபரிமலைக்கு செல்வோருக்கு ஒரு குட் நியுஸ்.. காணிக்கையை இனி கார்டில் ஸ்வைப் செய்யலாம்..!

e-hundis-at-sabarimala-to-help-devotees-having-no-cash-in-hand

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றதையடுத்து மக்களிடையே பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கார்டுகளில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதனை கையில் பெறுவது என்பதோ கடும் சிரமமாகியுள்ளது.

இதனையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், எந்தவித பிரச்னையுமின்றி தங்கள் காணிக்கைகளை கிரிடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதியை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியில் அனைத்து வங்கிகளின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். மேலும் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கார்டுகள் வழியாக காணிக்கையாக செலுத்தலாம். டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துவோர் குறைந்தபட்சம் 10 ரூபாயையும், கிரிடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் 1 ரூபாயையும் செலுத்த முடியும்.

நாடு முழுவதிலும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே சமயம் கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பனை காண பக்தர்களும் அதிகமானோர் செல்வார். எனவே பக்தர்களுக்காக இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close