[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது நாட்டு மக்களுக்கு பேரழிவைத் தரும்: மன்மோகன் சிங்

demonetisation-manmohan-singh-says-monumental-management-failure

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் அறிவிப்பை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் திட்டத்தை விமர்சித்துள்ளார். அப்போது பேசிய அவர், மோடியின் இந்த பண ஒழிப்பு என்பது அதிகாரப்பூர்வமான கொள்ளை, சட்டரீதியான சூறையாடல் என தெரிவித்தார். இத்திட்டத்தை கையாண்ட விதம் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. இது திட்டமிடப்பட்ட மோசடியாகவும், கறுப்புப் பணத்தை சட்டரீதியாக்குவதற்கும் உதவியிருக்கிறது.

மக்கள் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்வதும், அந்தப் பணத்தை அவர்கள் திரும்ப எடுக்க முடியாததும் நடைமுறையில் இருப்பதாக உலகில் உள்ள எந்த நாட்டையாவது காட்ட முடியுமா? உங்கள் நடவடிக்கையைக் கண்டிக்க இது ஒன்று போதாதா?. மக்களை இந்த திட்டம் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதற்கு இந்த ஒன்றே போதும். இந்த பண ஒழிப்பு என்பது நிச்சயம் பேரழிவைத் தரும் என்றார். மக்கள் படும் துன்பத்தை தீர்க்க ஒரு மாற்றுத் திட்டத்தைச் சொல்லுங்கள் பிரதமர் அவர்களே... அல்லது திட்டத்தை வாபஸ் பெறுங்கள் என கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close