[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை

west-bengal-13-arrest-made-in-connection-with-newborn-babies-kidnap

மேற்கு வங்காளத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று, கருக்கலைப்பு செய்ய வரும் பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, அங்கு கருக்கலைப்பு செய்ய வரும் பெண்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும், குழந்தை பெற்று தந்தால் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இந்த தகவல் மெதுவாக வெளியே கசிய, மருத்துவமனையில், நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, ஆண் குழந்தை பிறந்தால் 4,000 அமெரிக்க டாலர்களும், பெண் குழந்தை பிறந்தால் 1,500 அமெரிக்க டாலர்களும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இது நடைபெற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகளை பிஸ்கட் பெட்டிகளில் வைத்து வெளிநாடுகளில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே பச்சிளங் குழந்தைகளைக் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close