[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ரூபாய் நோட்டு விவகாரத்தால் ஆறாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

pm-calls-cabinet-meet-tonight-amid-opposition-attack

ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் ஆறாவது நாளாக முடக்கின.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலித்தது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து 6ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார். முன்னதாக ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மின்னணு பணபரிமாற்றத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close