[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை அரசு சேவைக்கு பயன்படுத்துவது இன்றுடன் முடிவு

old-currency-note-payments-in-govt-services-ends-today

அரசு சேவைகளுக்கு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான சலுகை இன்றுடன் முடிவடைகிறது.

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய 500,2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளன. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகள் இன்னும் போதிய அளவில் விநியோகம் செய்யப்படவில்லை. நாட்டு மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருவதால் வீடுகளுக்கான மின் கட்டணம், சிலிண்டர் கட்டணம், உள்ளாட்சிகளுக்கான வரிகள் போன்றவற்றை செலுத்த பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த சலுகை இன்றுடன் முடிவடைகிறது.

மேலும் பெட்ரோல் பங்க்குகள், அரசு மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்துக்கடைகள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள்,‌ விமான நிலையங்கள், போன்ற இடங்களிலும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் புதிய ரூபாய் நோட்டுகள் இன்னும் போதிய அளவில் விநியோகிக்கப் படாததால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close