[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை..?!

prime-minister-narendra-modi-to-attend-rajya-sabha-today

ரூபாய் நோட்டு பிரச்னையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார்.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பங்கேற்கிறார். அப்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close