[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ரூபாய் நோட்டுகளை ஏற்காத மருத்துவமனை... மத்திய அமைச்சரின் சகோதரர் உயிரிழப்பு

karnataka-hospital-where-union-minister-gowda-s-brother-died-refuses-old-notes

கர்நாடக மருத்துவமனையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்ததால், மத்திய அமைச்சரின் சகோதரர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சரான சதானந்த கவுடாவின் இளைய சகோதரரான பாஸ்கர், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மங்களூரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், சாதனந்த கவுடாவின் சகோதரர் உயிரிழந்ததாக கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவமனைக்கு அளிக்க வேண்டிய தொகையை காசோலை மூலம் அளித்து தனது சகோதரரின் உடலை அமைச்சர் சதானந்த கவுடா பெற்றுச் சென்றார். கருப்புப்பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close