[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

கூட்டுறவு சங்கங்களுக்கு பயிர்க்கடனாக ரூ.3000 கோடி.. ஜேட்லியிடம் அதிமுக எம்.பி.க்கள் மனு

aiadmk-mp-s-meets-finance-minister-arunjaitely

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான அளவு பயிர்க் கடன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை ‌எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் , மத்திய‌ நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் ரூபாய் நோட்டு விவகாரத்தால், தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைப்பதில் சிக்கல் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவு சங்கங்களுக்கு பயிர்க் கடனாக, 3 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் , எவ்வித கட்டுப்பாடின்றி,‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் வாரம் 24 ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதி தேவை என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மூலம் விவசாயிகள் தங்கள் கடனை திரும்பிச் செலுத்த அனுமதிக்க வேண்டும், காசோலை மூலம் பயிர் இன்சூரன்ஸ் பிரிமியத் தொகையை செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக வங்கிகளைப் போன்று, மத்திய கூட்டுறவு ‌வங்கிகளும் டெபாசிட் பெற வேண்டும் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ரொக்கமின்றி உரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்‌ இந்த மனுவை அளித்திருப்பதாக அதிமுக எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close