[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் ரொக்கமாகக் கிடைக்காது .. சக்தி காந்த தாஸ் புது குண்டு

sakthi-kantha-das-new-announcement

அரசு ஊழியர்களுக்கு வரும், மாதச் சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் இன்னும் பிரச்னைகள் ஓயாத நிலையில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று மேலும் புதிய அறிவிப்புகளை வெளிட்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சக்தி காந்த தாஸ், பயிர்க் கடன்களை கூட்டுறவு வங்கிகள் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிராம கூட்டுறவு வங்கிகள் வரை பண விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். நபார்டு மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப 82,000 ஏடிஎம்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய ஏ.டி.எம்.கள் இன்னும் சில நாட்களில் சரிசெய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு பணப் பரிவர்த்தனை முறை‌யை விரிவுபடுத்துவதே அரசின் நோக்கம் என கூறிய சக்திகாந்த தாஸ், மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெபிட் கார்டுகளை பயன்படுத்‌துவோர் மற்றும் ரயில்வே ஆன்லைன் இ-டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 31 வரை சேவைக் கட்டணம் கிடையாது எனக் கூறியுள்ள அவர், செல்போன் மூல‌ம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் சேவைக் கட்டணம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதச் சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிராகரிக்துள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close