[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

விமானநிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வரும் 28-ம் தேதி வரை ரத்து

parking-fee-cancel-date-extended

பொதுமக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருவதால் விமான நிலையங்களில் வாகனத்தை நிறுத்த, கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் இன்னும் போதிய அளவில் விநியோகம் செய்யப்படாததால் நாட்டு மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில் விமான நிலையம் செல்லும் மக்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பார்க்கிங் கட்டணத்தை கடந்த 21-ஆம் தேதி வரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இன்னும் சில்லரைத்தட்டுப்பாடு நிலவி வருவதால் பார்க்கிங் கட்டண ரத்தை வரும் 28-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இது இந்திய விமான நிலைங்களின் ஆணையம் மற்றும் தனியார் நிர்வகிக்கும் அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close